Monday, August 25, 2008

கோகிலம் சுப்பையா

கோகிலம் சுப்பையா இலங்கையின் மலையக மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் வடிக்க முற்பட்ட பல எழுத்தாளர்களில் ஒருவர்.

இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் (1947) பதுளை தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற பிரதிநிதியாக இருந்த எஸ். எம். சுப்பையா என்பவரை திருமணம் செய்ததின் மூலமே மலையக மக்களின் வாழ்க்கையை அறிந்து கொண்டவர். 1956ல் செக் நாட்டில் நடைபெற்ற உலகப் பெண் தொழிலாளர்களின் மகாநாட்டில், மலையகப்பெண்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். அங்கே தமிழ் அறிஞரான பேராசிரியர் Kamil Zvelebil அவர்களைச் ச்ந்திக்க நேர்ந்ததினால் அவரின் ஆலோசனைப்படி தனது தூரத்து பச்சை நாவலை எழுதத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார். 1965 இல் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளியிடப்பட்ட இந்த நாவல், Mirage என்ற பெயரில் ஆங்கிலத்தில் இவராலேயே மொழிபெயர்க்கப்பட்டது. பல கவிதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இவரது நூல்கள்
தூரத்துப் பச்சை (நாவல்)
Mirage தூரத்துப்பச்சை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு )

இவரைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் (ஆங்கிலத்தில்)

1 comment:

M.Rishan Shareef said...

இவரின் 'தூரத்துப் பச்சை' நாவலை சிறுவயது தொடக்கம் பலமுறை அழுதழுது வாசித்திருக்கிறேன். அவ்வளவு உருக்கமாக இருக்கும். அதன் இறுதி வெள்ளம் இன்னும் மனதுக்குள் ஓடுகிறது.

இந்த நாவலை எங்கு பெற்றுக் கொள்ளலாம்?
பிடிஎப் வடிவில் கிடைக்குமா ?