Sunday, December 17, 2006

சு.வில்வரத்தினம்




















(1950- 9.12.20006)

சு. வில்வரத்தினம் (1950-2006) யாழ்ப்பாணம் புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கியமான எழுத்தாளராகப் பரிணமித்தவர். 2 பிள்ளைகளின் தந்தை. 1991 ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்து, திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். இறக்கும் வரை திருகோணமலையிலே தொழிலாற்றினார்.

சு.வில்வரத்தினம் எழுதி வெளிவந்த கவிதைகளின் தொகுப்புக்கள்:
(1)அகங்களும் முகங்களும் (கவிதைத் தொகுதி, 1985)
(2)காற்றுவழிக் கிராமம் (கவிதைத் தொகுதி, 1995)
(3)காலத்துயர் (கவிதைத் தொகுதி)
(4)நெற்றிமண் (கவிதைத் தொகுதி, 2000)
(5) உயிர்த்தெழும் காலத்துக்காக - இவரது மொத்தக் கவிதைகளும் ஒரே தொகுப்பாக(கவிதைத் தொகுதி, 2001)

மரணத்துள் வாழ்வோம்(சில கவிதைகள்) தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும் கூட. ‘Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka’ தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கில வடிவிலே வெளி வந்துள்ளது.

விக்கிபீடியாவில்
சோமிதரனின் பதிவு
பெயரிலியின் பதிவு
சு.வில்வரத்தினம் குரல்பதிவு

3 comments:

Unknown said...

சு.வி வடகிழக்கு மகாண கல்வி கலாசார பண்பாட்டலுவல்கள் விளையாட்டத்துறை அமைச்சில் கலாச்சார உத்தியோத்தராக பணியாற்றியவர் அத்துடன் மு.மயூரனின் 'ம்' பதிவில் சு.வியின் பாடல் ஒன்று உள்ளது

எஸ்.சத்யன்

Unknown said...

அதுசரி சு.வி.யின் நெருங்கிய நண்பரும் அவருடன் ஒரே திணைக்களத்தில் பணியாற்றியவரும் சிற்நத சிறுகதை ஆசிரியருமான நந்தினி சேவியர் பற்றிய குறிப்பைக் காணோமே. இவரது சிறுகதைத் தொகுப்பு 'அயல்கிராமத்தைச் சேர்நதவர்கள்' ஈழத்தின் முக்கிய படைப்பாளி


எஸ்.சத்யன்

Chandravathanaa said...

தகவல்களுக்கு நன்றி சத்தியன்.
நந்தினி சேவியர் பற்றிய குறிப்புகள் இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா