Tuesday, May 10, 2005

குறும்பட இயக்குனர் அஜீவன்

அஜீவனுக்கும் ஊடகத்திற்குமான புரிதல் பதின்ம வயதினிலே ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் பிறந்து, இயந்திர பட்டப்படிப்பு பயின்று, ஊடகம் சுழலும் வாழ்வில் மனம் நுழைந்து கிடந்தாலும் சிங்கப்பூருக்கு வந்து சில ஆண்டுகள் படிப்பு சார்ந்த வேதியியல் தொழிற்நுட்பத்தில் பிழைத்து, பிறகு சில ஆண்டுகள் நிரந்தரமாக தன்னை தனக்குப் பிடித்த வேலைக்குள் இழைத்திருக்கிறார்.

நிழல் யுத்தம், எச்சில் போர்வைகள்... போன்ற குறும்படங்களைத் தயாரித்து, இயக்கி வெற்றியும் கண்டுள்ளார்.

தன்னைப்பற்றி அஜீவன்:
an Indo-Srilankan born in SriLanka with two eyes and now often makes use of my third eye to see the world. Brought up in Singapore, I have roamed around the world and had left a mark wherever I'd gone. I have learnt the subject called "Life" through my teacher called 'experience" I have known not only in Switzerland but in the entire Tamil community spread across the globe for my Short films, TV programmes and commercials.I have also tried my hands on feature films in various Indian languages.I am a perfectionist and finds immense pleasure in implementing the photographic visual design for the films. While glamour photography of advertising has been the norm in cinema, My approach to lighting is structured on realism.Being a multi-faceted personality, also have expertise in editing, script writing and direction. I believes in team work and no wonder his crew loves this humble and comprehensive personality.The awards in my living room speak of my reputation.............. http://www.ajeevan.com

Wednesday, April 20, 2005

முத்துப் புலவர் அரியகுட்டி

முள்ளியவளை தந்த முத்துப் புலவர் அரியகுட்டி

நாட்டார் பாடல்கள் எனப்படும் பாடல்களை இயற்றியவர் அரியகுட்டிப் பாவலர். இவர் தந்தையார் பெயர் நாகப்பர். இவர் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு அயலில் வாழ்ந்தவர். அரிவுவெட்டுக் காலங்களில் பாடப்படுவதற்கான பாடல்களை இயற்றியுள்ளார். காதுக்கு இனிமை தருவதாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன.

இவர் தான் இயற்றிய பாடல்களை 1937ம் ஆண்டு தொகுத்து ஒரு நூல் வடிவில் தொகுத்துத் தந்துள்ளார். இந்தப் பாடல்கள் இன்றும் வன்னிப் பிரதேச வயல்களில் நெல் அறுவடையின் போது பாடப்படுகின்றன. இவர் இயற்கையிலேயே புலமை நிறைந்தவராக விளங்கினார். யாரிடமும் இலக்கணம் கற்றுக்கொள்ளாத இவர் செவிவழி கேட்ட ஞானத்தைக் கொண்டு பாடல்களை எமக்குத் தந்துள்ளார்.

கார்சேரும் சோலைக் கதிரையின் வேலாயுதர்மேல்
சீர்மேவும் பல்லினிசை செப்பவே
கூர்சேரும் கொம்பு ஒருகைக் கொண்டதொரு
குடவயிறனே அரியின் ஐந்துகர தும்பிமுகன் காப்பு


என இவரின் பாடல் ஆரம்பிக்கின்றது.

Quelle - vannithendral

Thursday, February 24, 2005

என்.கே.மகாலிங்கம்

எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம். தமிழ் இலக்கிய உலகில் 'பூரணி' மகாலிங்கம் என அறியப்பட்டவர். இவரும் அறுபதுகளிலிருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தன் பங்களிப்பை சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் எனப் பல்வேறு வழிகளில் ஆற்றி வருபவர்.

'பூரணி' என்னும் சஞ்சிகை இவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்ததன் காரணமாகவே இவர் 'பூரணி' மகாலிங்கம் என அழைக்கப்பட்டார். கனடாவிலிருந்து வெளிவரும் 'காலம்' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவர்.

அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட, நோபல் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர் 'சினுவா ஆச்சிபி'யின் மிகவும் புகழ்பெற்ற நாவலான 'Things Fall Apart' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'சிதைவுகள்' நாவலைத் தமிழுக்கு மொழிபெயர்த்தவர் இவரே. இவரது 'உள்ளொளி' என்னும் கவிதைத்தொகுதி 'காலம்' வெளியீடாக வெளிவந்துள்ளது.

அ.முத்துலிங்கம்

தமிழ்ச் சிறுகதை உலகில் அறுபதுகளிலிருந்து இன்றுவரை சளைக்காமல் எழுதிவரும் அ.முத்துலிங்கத்தின் சிறுகதைத் தொகுதிகளை தமிழகத்தில் காந்தளகம், காலச்சுவடு மற்றும் அண்மையில் தமிழினி பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.

இதுவரை இவரது 'அக்கா' (1964), 'திகடசக்கரம்' (1995), 'வம்சவிருத்தி' (1996), 'வடக்கு வீதி' (1998), 'மகாராஜாவின் ரயில் வண்டி' (2001) மற்றும் 'அ.முத்துலிங்கம் கதைகள்' (2003) ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

தினகரன் தமிழ் விழா சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, கல்கி சிறுகதைப் போட்டிப் பரிசு, லில்லி தேவசிகாமணி பரிசு( 'திகடசக்கரம்'), தமிழ்நாடு அரசு முதற் பரிசு ('வம்சவிருத்தி'), ஸ்டேட் பாங் ஒவ் இந்தியா முதற் பரிசு ('வம்சவிருத்தி'), இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு ('வடக்கு வீதி) ஆகிய பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார்.

இவரது படைப்புகளைப் பற்றி எழுத்தாளர் அம்பை " அ.முத்துலிங்கத்தின் கதைகள் நாம் அறிந்த உலகங்களுக்கு நம்மை நாம் அறியாத பாதைகளில் இட்டுச் செல்பவை. நாம் அறிந்த உலகங்களின் கதவுகளையும், சாளரங்களையும், காதல்களையும் ஓசைப்படுத்தாமல் மெல்லத் திறப்பவை" என்று குறிப்பிடுவார்.

Wednesday, February 23, 2005

மஹாகவி - Mahakavi Thu. Uruthiramoorthy

மஹாகவி வாழ்க்கைக் குறிப்பு

பெயர்:
துரைசாமி உருத்திரமூர்த்தி. (ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு 'உருத்திரமூர்த்தி' என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார்.)

வேறு புனைபெயர்கள்:
பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன்.

பிறப்பு:
09. 01. 1927

கல்வி:
எஸ். எஸ். சி. (ஆங்கில மொழி மூலம்)
Senior school certificate (English)
தமிழில் அதி உயர் சித்தி

தொழில்:
20. 11. 45 - 58 வரை: எழுதுவினைஞர், திறைசேரி, கொழும்பு.
1959-1961: எழுதுவினைஞர், கடற்படை அலுவலகம், திருக்கோணமலை.
1962-1967: எழுதுவினைஞர், குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களம், கொழும்பு.
1967: இலங்கை நிர்வாக சேவைத் தேர்வில் வெற்றி பெறுதல் (CAS/SLAS). மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம். மாரடைப்பு முதலாவது தாக்குதல்.
1968-1969: மாவட்டக் காணி அதிகாரி, யாழ்ப்பாணம்.
1970: அரச செயலகத் துணைவர் (OA), மட்டக்களப்பு.
1971: உதவி ஆணையாளர், அரசகரும மொழித் திணைக்களம், கொழும்பு.

திருமணம்:
30. 08. 1954

வாழ்க்கைத்துணை:
பத்மாசினி முத்தையா

மகன்/ மகள்:
பாண்டியன், சேரன், சோழன், இனியாள், ஔவை

மருமக்கள்:
எஸ். கே. விக்னேஸ்வரன், ந. இரவீந்திரன், கல்பனா சோழன், ஸ்வெட்லானா பாண்டியன்

பேரப்பிள்ளைகள்:
அரசி, அனிச்சா, எல்லாளன், ஆன்யா, செந்திரு, செழியன்

இறப்பு:
ஜூன் 20, 1971


மஹாகவியின் காவியங்கள்

1. கல்லழகி
எழுதப்பட்டது டிசம்பர் 1959. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை.

2. சடங்கு
எழுதப்பட்டது 1961 இறுதியாக இருக்க வேண்டும். 1962 ஜனவரி முதல் தினகரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.

3. தகனம்
1962ல் முருகையனுடன் இணைந்து எழுதப்பட்டது. அதே ஆண்டு தேனருவி சஞ்சிகையில் 5 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது.

4. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்
எழுதப்பட்டது ஜூலை 1965. 1966 டிசம்பர் முதல் சுதந்திரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1971ல் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு இதனைத் தனிநூலாக வெளியிட்டது.

5. கண்மணியாள் காதை
எழுதப்பட்டது (கலட்டி என்ற பெயரில்) நவம்பர் 1966. 1967ல் விவேகியில் (அதே பெயரில்) 7 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1968ல் யாழ்ப்பாணம் அன்னை வெளியீட்டகம் திருத்தப்பட்ட பிரதியை முதலில் நூலாக வெளியிட்டது.

6. கந்தப்ப சபதம்.
எழுதப்பட்டது 1967. 1968 பிப்ரவரி 27 முதல் ஈழநாடு வார இதழில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.

இதுவரை வெளிவந்த மஹாகவியின் நூல்கள்

வள்ளி ('மஹாகவி' கவிதைகள்)
முதற்பதிப்பு: ஆடி 1955
வரதர் வெளியீடு-
விற்பனையாளர்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசதுறை வீதி, யாழ்ப்பாணம்.

மஹாகவியின் குறும்பா
முதற்பதிப்பு: 17 பெப்ரவரி 1966
அரசு வெளியீடு,
231, ஆதிருப்பள்ளித் தெரு,
கொழும்பு- 13.

மஹாகவியின் கண்மணியாள் காதை
(வில்லுப்பாட்டு)
எழுதியது: நவம்பர் 1966
முதல் வானொலி பரப்பியது: மே 1967
முதல் மேடையேற்றியது: டிசம்பர் 1967
முதல் அச்சேற்றியது: நவம்பர் 1968
அன்னை வெளியீட்டகம்,
89/1, கோவில் வீதி யாழ்ப்பாணம்.

மஹாகவியின் கோடை(பா நாடகம்)
எழுதியது: பெப்ரவரி 1966
முதல் மேடையேற்றம்: ஓகஸ்ட் 1969
முதல் பதிப்பு: செப்டெம்பர் 1970
இரண்டாம் பதிப்பு: நவம்பர் 1988
மூன்றாம் பதிப்பு: ஜூன் 1990
வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம்.

ஒரு சாதாரண மனியனது சரித்திரம்
1971

வீடும் வெளியும் (கவிதைத் தொகுதி)
முதற் பதிப்பு: ஜூன் 1973
வாசகர் சங்கம், 'நூறிமன்சில்', கல்முனை- 6.
(வாசக சங்க வெளியீடு -6)

மஹாகவியின் இரண்டு காவியங்கள்
1. கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம்
2. சடங்கு
முதற்பதிப்பு: ஜூலை 1974
பதிப்பாசிரியர்: டாக்டர் சாலை இளந்திரையன், தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி-7.
பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை-1.

மஹாகவி கவிதைகள்
1984

புதியதொரு வீடு
1989

மஹாகவியின் ஆறு காவியங்கள்
1. கல்லழகி
2. சடங்கு
3. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்
4. கண்மணியாள் காதை
5. கந்தப்ப சபதம்
6. தகனம்
முதற்பதிப்பு: மார்ச் 2000
வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை
பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.

மஹாகவியின் மூன்று நாடகங்கள்
1. கோடை
2. புதியதொரு வீடு
3. முற்றிற்று
முதற்பதிப்பு: ஜூன் 2000
வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஸன் பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான்

Thu. Uruthiramoorthy (1927-71), popularly known as "Maha-kavi", is highly regarded as the father of modern Eelam poetry(read : Sri Lankan Tamil poetry). His poems, written within thebounds of Tamil prosody ('yaappu'), were aimed at reaching thecommon folk. They touched a wide ranging aspects of daily life,were easy to comprehend and instigated enormous interest amongreaders. Mahakavi was also considered a pier, who inspired a rich breed of young poets to follow his footsteps. Born in a poor family of classical musicians and broughtup in Alaveddy, a birth place of a variety of artists, includinghis childhood friends A. Na. Kanthasamy and A. Se. Murugananthan, Mahakavi exhibited prodigious talent for creative writing. He edited a tiny manuscript magazine `minnal' at the age of fourteen.

Mahakavi was influenced by Subramaniya Bharathi's poemsfirst. However, the poet who inspired him the most was TrichiKalaivanan (1940s-50s). Mahakavi was in close contact with Ci.Su.Chellappa, founder-editor of `ezhuththu' (60s), a milestone inthe history of Modern Tamil Literature. His early works appearedin two literary magazines published in Tamil Nadu: `kiraamaoozhiyan' and `ezhuththu' in 1950s and 60s respectively.
Uruthiramoorthy used many pen names (ex: `paNdithar'),but `mahaakavi' was his last and the most popular one. He called himself so, because he wanted to have a better pseudonym over his childhood friend and "competitor", A. Na. Kanthasamy, who called himself `kaveenthiran' (king of poets). Mahakavi was a proud poet who characteristically displayed a sense of superiority in his first book `vaLLi':
`.... anthap pazhang kampan emmidaiyE meeNduLLaan....'
`.... ponnaiyithu ponnenRu pOtrath theriyaathOr pOkaddum....'
`.... sirappukkoru puthiya sikaraththai naan amaippEn....'
[`vaLLi', 1955]
Mahakavi is noted for his reformatory role in modernTamil poetry during the 50s and 60s. Two early reformers,Subramaniya Bharathi and Na.Pichamurthy had by then introduced the use of simple words and liberal grammatic structure for Tamilpoetry, thus enabling the access of commoners to literaryappreciation and creation. The momentum of this reformative trendwas eroded enormously during the '60s, especially in Tamilnadu.An off-shoot of the `kazhakam' emergence was an undue emphasis onalliteration which affected spontaneity of expression in thepoetry. Mahakavi pioneered reforms in the rhythm of the Tamilpoems, within 'yaappu' with formatively structured work. From a"poetic rhythm" the poems assumed a "colloquial rhythm", yetvividly enhancing the beauty of spontaneous expression. Poets whofollowed his footsteps were very successful in this trend. Eelampoets led by Mahakavi were well ahead of their counterparts across the Palk Straight in this regard. The following is a typical poem by Mahakavi:

`chiRu naNdu maNal meethu padam onRu keeRum
chilavELai athai vanthu kadal koNdu pOkum
kaRi choRu pothiyOdu tharukinRa pOthum
kadal meethu ivaL koNda payam onRu kaaNum

veRu vaana veLi meethu mazhai vanthu cheeRum
veRi koNda puyal ninRu karakangaL aadum
eRikinRa kadal enRu manitharkaL anjaar
ethuvanthatheninenna athai venRu chelvaar....'

[from `puthiyathoru veedu', published in 1989]
The poetry in the Sangam age imparted clear visual images ascompared to the poetry of medieval age which was mainly concernedwith better rhythm and sound effects. Thanks to the efforts ofMahakavi, poetry regained the visual imagery that characterisedthe Sangam poetry. His poems `akalikai' and `oru chaathaaraNamanithanathu chariththiram' are as good as snap shots. Novelty being a part in Mahakavi's poetry, he conceptualizedthat drama could be written using poems and colloquial rhythm.He also introduced limerics, a poetry form in English used forwriting children's rhymes and humor,in Tamil. His Tamil limerics,known as `kuRumpaa', spanned all sundry aspects of daily life. Following is his `kuRumpaa' on bribery:

`muththedukka moozhkukiRaan seelan
munnaalE vanthu ninRaan kaalan
saththaminRi vanthavanin
kaiththalaththil paththu
muththaip poththivaiththaan pOnaan muchchoolan'

[`kuRumpaa', 1972]
The best among Mahakavi's contributions was the inspirationhe instilled in writers of his and subsequent generations. M.A.Nuhman and Shanmugam Sivalingam were the first to emerge in"Mahakavi Tradition", followed by T.Ramalingam, M.Ponnampalam,A. Yesuraasa, Sivasegaram, Cheran, Vijayenthiran and so on.
Several of Mahakavi's works have been published in bothSri Lanka and India. His first anthology of poetry , `vaLLi', waspublished by Varathar Publications in 1955. His `kaNmaNiyaaL kaathai', based on caste problem, was published in 1965. His nextwork `yaazhOsai', though completed in 1968, unfortunately remainsunpublished. But, in 1969, `veedum veLiyum',another poetry coll-ection, was published. In his `kOdai'(70) Mahakavi successfullyexperimented poetry-drama. This was the last of his works to bepublished when he was alive. Later in 1972 `kuRumpaa', and in1973 `oru saathaaraNa manithanathu sariththiram' were published.`mahaakaviyin irandu kaviyangal' was published in India in 1975.This volume carried two of Mahakavi's works: `kanthappa sapa-tham,' in which he humorosly expressed his ecological concerns,and `chadangu,' which captured the unnecessary and expensive
traditions and rituals among Tamil community of his time. In 1984Annam Publications published `mahaakavi kavithaikaL',an anthologyof selected poems of Mahakavi with an introduction by M.A. Nuhmanin an attepmt to introduce him to the new generation readers inTamil Nadu. Later in 1989, a drama by Mahakavi, `puthiyathoruveedu', was published by the Friends of Mahakavi. Some of his unpublished manuscripts were lost when theSriLankan army forcibly occupied his family house, `neezhal'.How-ever, there are, still, quite a few of his unpublished works thatremain with his friends and family. Some of his friends are pre-sently exploring the possibilities of publishing them in India orCanada. His published works might also be republished in Canadaor Europe in the near future.
Mahakavi was a simple person in his personal life. Hestarted his professional career as a clerk in government serviceand rose to the level of an officer in the Ceylon AdministrativeService, CAS. He was an avid ornithologist and founder of a localclub, `paRakkum chidduk kazhakam' (Flying Birds Club), spending alot of his free time bird watching. He was a collector of egg shells and feathers of birds, with a variety of beautiful nestshanging all over his living room.
There could be no doubt that Mahakavi is one of the bestTamil poets of the twentieth century. "Mahakavi is the most important poet after Bharathi (paarathikkup pinthiyathOr periyakaviyaatral)", described A. Yesurasa, in his dedication of his`tholaivum iruppum Enaiya kathaikaLum'. Mahakavi defines poetryin his preface to 'kuRumpaa':
`...... kavithai kadalaLavu paranthu pattadhu. kadavuLaiyum kaathalaiyum pOtruvathu madumanRu athan paNi. kOtpaadukaLai vizhungi vittuch chemiththuk koLLa mudiyaathavarkaL mOnthu muNumuNuppathaRkaaka ezhuthappaduvathumillai athu. athu chaadhaaraNa manitharkaLin uLLaththil paayap piRappathu...'
(Poetry is as broad as an ocean. Its purpose is not limited topraising God and love. Nor it is for soothing of people who havetrouble with principles. It is born to penetrate the heart of thecommon people). It is unfortunate that Mahakavi did not live long enoughto read the works of poets inspired by him.But, his contributionsto the development of Tamil poetry will be eternal.